4 ஆண்டுகளுக்குப் பின்பு சென்னை-ஹாங்காங்கிற்கு நேரடி விமான சேவை: பிப்.2ல் மீண்டும் தொடங்குகிறது

சென்னை: சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு, நேரடி பயணிகள் விமான சேவை பிப்ரவரி 2ம் தேதி மீண்டும் தொடங்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், இயக்கி வந்த நேரடி விமான சேவைகள் கடந்த 2020 மார்ச் மாதம், கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்பு நேரடி விமான சேவை மீண்டும் தொடங்காமல் இருந்தது.

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பின்பு, வரும் 2024 பிப்ரவரி 2ம் தேதியில் இருந்து, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும், ஹாங்காங்- சென்னை- ஹாங்காங் இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமான சேவை வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும். இது தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு சென்னையில் இருந்து ஜப்பான், தென் கொரியா, லண்டன் ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு, இந்த விமானம் இணைப்பு விமானமாகவும் இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு