சென்னை ஆளுநர் மாளிகை வாயிலின் முன் பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபர் கைது ..!!

சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டை பகுதியில் ரவுடியாக வளம் வந்தவர் கருக்கா வினோத். இவர் ஏற்கனவே ஒரு வருப்பிடத்திற்கு முன்பு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் இவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அதில் ஒரு குண்டு வெடித்து சிதறியுள்ளது. பெட்ரோல்குண்டு வீசிய ரவுடிகருக்கா வினோத்தை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர் கையிலிருந்த மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ரவுடி கருக்கா வினோத் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 10 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். நீட் தேர்வு விளக்கு தொடர்பான மசோதாவுக்கு கையெழுத்திடவேண்டும் என்பதை வலியுறுத்தி பெட்ரோல் குண்டை வீசியதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கருக்கா வினோத்திடம் கிண்டி காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்தின் எதிரொலியாக ஆளுநர் மாளிகையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் கைவரிசை பிரபல மோசடி மன்னன் முகமது தாவூத் கான் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை