சென்னையில் கருட சேவையின் போது பெருமாள் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி: உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தண்டு உடைந்ததாக தகவல்

சென்னை: சென்னை திருவெற்றியூரில் கருட சேவை உற்சவத்தின் போது வாகனத்தின் தண்டு உடைந்து பெருமாள் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காலடிபேட்டை கல்யாண வரதராஜர் பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பெருமாள் கருட வாகனத்தின் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கருட வாகனத்தை தூக்கும் போது திடீரென தண்டு உடைந்து பெருமாள் ஒரு பக்கம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெருமாளுடன் மேலே நின்ற பட்டாச்சாரியார் முரளிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து கோபுரவாசல் உடனடியாக மூடப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கருட சேவை உற்சவம் நடைபெற்ற நிலையில் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தண்டு உடைந்ததாக தெரிகிறது. வாகன தண்டுகளை சரிசெய்த பிறகு பெருமாள் கோபுர வாசலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்