சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..!!

சென்னை: புழல் ஏரிக்கு வினாடிக்கு 95 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2540 மில்லியன் கன அடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 105 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 500 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 304 மி.கனஅடியாக உள்ளது.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்