சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855-ஆக நிர்ணயம்

சென்னை: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50-ஆக நீடிக்கிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.38 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று முதல் வணிக சிலிண்டர் விலை ரூ.1,855-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ7.50 உயர்ந்த நிலையில், இன்று ரூ30 உயர்ந்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50 என்ற நிலையில் நீடிக்கிறது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!