சென்னையில் சோகம்… கெமிக்கல்களை வைத்து டெஸ்ட் செய்த பிளஸ் 2 மாணவன் உடல் சிதறி பலி..!!

சென்னை: சென்னை கொளத்தூரில் பாஸ்பரஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்களை வைத்து வீட்டிற்குள் ஆய்வு செய்த 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆய்வின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் முருகன் நகரை சேர்ந்தவர் ஆதித்ய பிரணவ் இவர் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் இவரின் தந்தை ஹரிஹரன் கார் பேட்டரிகளை விற்று தொழில் செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாஸ்பரஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்களை வைத்து பிரணவ் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக கெமிக்கல் மற்றும் பேட்டரிகள் வெடித்து சிதறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அறிந்த அதிர்ச்சியில் உயர்ந்த மாணவரின் தந்தை ஹரிஹரன் சில ஆண்டுகளுக்கு முன் கொரோனாவால் மனைவி உயிரிழந்ததாகவும் தற்போது தனது ஒரே மகனையும் இழந்து நிற்பதாகவும் கூறி கதறி அழுதது காண்போரை சோகத்தில் தள்ளியது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாணவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வெடிவிபத்து சம்பவத்தில் மாணவரின் வீட்டிற்கு அருகில் உள்ள 5க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்