சென்னையில் இன்று பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

சென்னை: நடப்பாண்டு பி.எட். படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று முதல் தொடங்குகிறது.பி.எட். படிப்பில், 7 அரசு கல்லூரிகளில் உள்ள 900 இடங்கள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 26ம் தேதி நிறைவடைந்தது.

நடப்பாண்டு மொத்தம் 3,486 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 2,187 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பி.எட் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் செப்.30ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, இவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி 19ம் தேதி வரை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் பாட வாரியாக நடைபெற உள்ளது.

முதல் நாளான இன்று, காலை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், மதியம் பி.இ முடித்தவர்கள் மற்றும் வரலாறு பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. மாணவர்கள் பாடவாரியாக எந்த தேதியில் கலந்தாய்வுக்கு வர வேண்டும் என்ற தகவல்கள் எஸ்எம்எஸ் மற்றும் மெயில் மூலமாக அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்