சென்னை விமான நிலையத்தில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் தடுமாறும் ஓட்டுநர்கள்: டோல்கேட்டில் கட்டண கொள்ளை என குற்றச்சாட்டு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் முறையான திட்டமிடலுடன் பார்க்கிங் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கும் கால் டாக்சி ஓட்டுநர்கள் எதற்கெடுத்தாலும் பணம் பறிப்பதிலேயே டேல்கேட் ஊழியர்கள் குறிப்பாக உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். நாள்தோறும் 57,000 பயணிகளும், 47,000 பார்வையாளர்களும் வந்து செல்லும் இடமாக உள்ளது சென்னை விமான நிலையம். ஆனால், பார்க்கிங் வசதி டோல்கேட் குளறுபடிகளால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக கால் டாக்சி ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விமான நிலையத்திற்குள் 10 நிமிடத்திற்குள் வந்து சென்றால் கட்டணம் இல்லை என்பதால் வேண்டுமென்றே நேரத்தை விரயமாக்கி டோல்கேட் ஊழியர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றச்சாட்டினர்.

விமான நிலையம் வளாகத்தில் உள்ள வணிக வளாகம், திரையரங்குகளுக்கு வரும் வாகனங்களும் ஒரே பாதையிலேயே வெளியேறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறுகின்றன. வருகை பகுதியில் இருந்து 500மீ தொலைவில் பன்னடுக்கு பார்க்கிங் உள்ளதால் பயணிகள் நடந்து செல்லும் நிலை உள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதால் உள்நாட்டு முனையம் அருகேயே பார்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது கோரிக்கை. பார்க்கிங் பிரச்சனை தொடர்பாக விமான நிலையம் தரப்பில் கேட்டபோது இதற்கு தீர்வு காணும் வகையில் பன்னடுக்கு கார் பார்க்கிங் அருகில் பயணிகளை ஏற்றுவதற்கான இடம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related posts

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது

கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம்