சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட்..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை விமான நிலைய குடியுரிமை பிரிவில் இமிகிரேஷன் அலுவலராக சரவணன் பணியாற்றி வருகிறார். இமிகிரேஷன் அலுவலர் சரவணன் நடவடிக்கைகளை கண்காணித்ததில் அவர் முறைகேடு செய்துள்ளது உறுதியானது.

போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்யும்போது சரவணன் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திவருவோருக்கு சரவணன் உடந்தையாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பயணிகள் கடத்தி வரும் தங்கத்தை சரவணன் வாங்கி சுங்க சோதனை இல்லாமல் வெளியே எடுத்துச் செல்ல உதவி என தகவல் தெரியவந்தது. சஸ்பெண்ட் ஆன சரவணனிடம் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related posts

செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்

தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு