செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 ஊராட்சிகளில் இன்று (ஜூலை 1ம் தேதி) காலை 11 மணி முதல் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடக்க உள்ளன. கிராம நிர்வாகங்கள் சார்பில் கூட்டம் நடைபெறவுள்ள இடங்கள் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல், கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. இதில், கிராம மக்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் முறையாக நடைபெறுகிறதா என கண்காணிக்க வட்டார அளவிலான உதவி இயக்குநர் நிலையிலான பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா