செங்கல்பட்டில் தேசிய தொழிற்பழகுநர் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்ததி குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 11.12.2023 அன்று பல்வேறு தொழிற்பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு, பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை கொண்டு நடத்தப்படுகிறது. இம்முகாமில், தகுதியுடை ஐடிஐ தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது. மேலும், இது தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள செங்கல்பட்டு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது dadskillcpt@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 63790 90205, 044-2742 6554 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு, தொழிற்பழகுநர் முகாமில் கலந்து கொள்ளலாம்.

Related posts

ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் டாடா நிறுவன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை புரட்டிப் போட்டுள்ள ஹெலீன் புயல்: மழை பாதிப்பால் 33 பேர் உயிரிழப்பு

மரபணு குறைபாடுடைய அரிதான வெள்ளை நாகம் கோவையில் பிடிபட்டது