செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பிக்கும் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் அரசு போக்குவரத்துக் கழகம் இணைந்து 2024-25ம் நிதியாண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. எனவே, இம்மாதம் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இச்சிறப்பு முகாமில் பார்வையற்றோர், கை – கால் பாதிக்கப்பட்டோர், அறிவு சார் குறைபாடுடையோர், காது கேளாதோர், வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, பணிச்சான்று, மருத்துவ சிகிச்சை சான்று. கல்வி பயிலும் சான்று ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்று பேருந்து பயண அட்டையினை புதுப்பித்து கொள்ளவும் மற்றும் புதிய பயண அட்டைக்கு விண்ணப்பித்து அன்றே புதிய பயண அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் புதிய அட்டை பெறுவதற்கும் புதுப்பித்து கொள்ளுவதற்கும் தங்கள் பகுதியில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் (online) உரிய ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, பணிச்சான்று, மருத்துவ சிகிச்சை சான்று, கல்வி பயிலும் சான்று பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். பயண அட்டை பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு பதிவு இறக்கம் செய்து கொள்ளுவதற்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சிவகாசி அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி..!!

ஊழல்வாதிக்கு துணைபோகும் ஆளுநரை கடுமையாக கண்டிக்கிறோம்: பெரியார் பல்கலை. துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு ஜவாஹிருல்லா எதிர்ப்பு!!