செங்கல்பட்டு மாவட்ட ஓட்டல்கள் சங்க பொதுக்குழு கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் செங்கல்பட்டு மாவட்ட ஓட்டல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுரவ தலைவர்கள் ஜனார்த்தனம், இளங்கோவன், மாநிலத் தலைவர் வெங்கடசுப்பு, மாநிலச் செயலாளர் சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ஜெயசிம்மன், மாவட்ட சங்க ஆலோசகர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை தலைவர்கள் ராமச்சந்திரா உபாத்யாயா, குப்புசாமி, வெங்கட கிருஷ்ணன், மாநில இணை செயலாளர் சண்முக பழனியப்பன், ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். இதையடுத்து, சங்கத்தில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது, உணவு கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், சுற்றுச் சூழலை பாதுகாக்க குப்பை உள்ளிட்ட பொருட்களை மறுசுழற்சி செய்ய, முக்கிய இடங்களில் மறுசுழற்சி மையம் அமைத்து தர முதல்வர் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில், 200க்கும் மேற்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வங்கதேசம் 233 ரன்னில் சுருண்டது வெற்றி முனைப்புடன் இந்தியா அதிரடி: 9 விக்கெட்டுக்கு 285 ரன் குவித்து டிக்ளேர்; பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட்

பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

பெரியப்பாவின் தலையை பீர் பாட்டிலால் உடைத்த தம்பி மகன்