செங்கல்பட்டில் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தோரயமாக மொத்த பணி காலியிடங்கள் 3359. இப்பணிக்காலியிடங்களுக்கு கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் வாயிலாக கடந்த 18ம் தேதி துவங்கியது. விண்ணப்பிக்க வரும் 17ம் தேதி கடைசி நாள். இப்போட்டித்தேர்வுக்கான எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு 1.7.2023 அன்றைய தேதியில் பொதுப்பிரிவினருக்கு 26 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவினருக்கு 28 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 31 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும், விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க www.tnusrb.tn.gov.in இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இப்போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 14.9.2023 அன்று துவங்கவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மேற்காணும் கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் உடல் தகுதி உடையவர்கள் இப்போட்டி தேர்விற்கு விண்ணப்பம் செய்யலாம். செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய உள்ளவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. எனவே, தகுதியுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டைகளுடன் நேரில் வருகை புரிந்து பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணிக்கு தயாராகிவரும் செங்கல்பட்டு மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்யுமாறும், இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடைய வேண்டும்.’’

Related posts

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!!

பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வருவதால் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுப்பு