செங்கல்பட்டில் விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்திற்க்கு உதவி செய்த லாரி உரிமையாளர்

 


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் அருகே கடந்த 30 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பாலூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பாலூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த கங்காதரன் மற்றும் மனைவி அமுலு ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய லாரி உரிமையாளர் தாமோதிரன் என்பவர், தனது லாரி மோதி விபத்து ஏற்படுத்தி இருவர் உயிரிழந்தனர் விபத்தில் உயிரிழந்த கங்காதரம் – அமுலு தம்பதியினர்க்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

மூன்று பேரில் ஒருவருக்கு கூட தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை, எனவே பாதிக்கப்பட்டு குடும்பத்தினர்க்கு உதவ வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் தாமோதிரன் செங்கல்பட்டு தாலுகா நிலையத்தை நாடியுள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் அனுமதியோடு அவர்களின் முன்னிலையில் தாமோதிரன், விபத்தில் உயிரிழந்த கங்காதரம் – அமுலு தம்பதியின் இரண்டு மகன்கள், ஒரு மகள் என மொத்தம் மூன்று பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் ரொக்க பணமாக வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட மூன்று பேரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

எதிர்பாராத விதமாக என்னுடைய ஓட்டுநர் விபத்து நடத்தியதில் தந்தை, தாய் இருவரும் உயிரிழந்தனர், இருவரை பறிகொடுத்தது கட்டாயம் ஈடு செய்ய முடியாத இழப்பு, என லாரி உரிமையாளர் தாமோதிரன் கண்ணீர் மல்க மூன்று பேரிடமும் வருத்தம் தெரிவித்தார். மேலும் உங்கள் மூன்று பேருக்கும் எந்த உதவியாக இருந்தாலும் தகவல் தெரியபடுத்துங்கள் கட்டாயம் நான் உதவி செய்வேன் என காவல்துறையினர் முன்னிலையில் தாமோதிரன் உறுதியளித்தார்.

தனது ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்தி இருவர் உயிரிழந்த நிலையில் உதவி என்று யாரும் கேட்காமல் லாரி உரிமையாளர் தாமாக முன் வந்து உதவி செய்தது பாலூர் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா முத்துகுமாரசாமி, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதாசிவம், தனிப்பிரிவு காவலர் ஜெகன் மற்றும் காவலர்கள் பாலூர் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Related posts

சொல்லிட்டாங்க…

கதர் சட்டைக்காரரை தூக்க இலைக்கட்சி தலைவர் விரிக்கும் வலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்