செங்கை பத்மநாபன் நீதிபதிகளுக்கு வாழ்த்து

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள வாழ்த்து செய்தி: பிரிவினையை தவிரித்து ஒரு சார்பற்று நடுநிலையோடு உலக அளவில் விஞ்ஞான முறையில் பெருகி கொண்டிருக்கும் பலதரப்பட்ட குற்றங்களை சர்ச்சைகளை அசாதாரண சூழ்நிலைகளை மனித உரிமை மீறல்களை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நீதி வழங்கி மக்கள் மனதில் நம்பிக்கையுடன் நீதியரசர்கள் விளங்கி வருகின்றனர். ஜூலை 17ம்தேதி தேசிய நீதி (ம) நீதியரசர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

எனவே, நீதியரசர்களுக்கு நமது கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் பொதுமக்களும் வாய்ப்பு கிடைத்தால் நேரடியாகவோ, மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் மூலமோ வாழ்த்துக்களை தெரிவித்துகொள்ள கேட்டுக்கொள்வதுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்