செங்கை அரசு மருத்துவமனையில் மீட்கப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரலாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்து பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 7.6.2023 அன்று இரவு 8 மணியளவில் பிறந்து பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் குழந்தைகள் நலக்குழுவில் பாதுகாப்பான முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நலக்குழுவின் மூலம் அதியமான் என பெயர் வைக்கப்பட்டு குழுவின் ஆணையின் பேரில் 8/8/2023 அன்று புனித தோமையர்மலை, செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு தத்து மையமான ஹோலி அப்போஸ்டைல் கான்வெண்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. எனவே, இந்த ஆண் குழந்தையை குறித்து உரிமை கோர விரும்புவோர் செய்திதாளில் அறிவிப்பு வெளி வந்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தக்க சான்றிதழ்களுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும், 63826 13182, 98406 76135 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்