ரசாயன கலப்பு இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மாசு கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகளை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ரசாயனம் கலந்த விநாயகர் சிலை செய்வதற்கும் கரைப்பதற்கும் தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் அரசுபாண்டி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் ரசாயனத்தால் செய்யப்படும் சிலைகள் சரியாக கரைவதில்லை மற்றும் அதனால் மாசு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க களிமண் சிலைகளை மட்டுமே செய்ய உத்தரவு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகளை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேதிப் பொருளால் ஆன விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. ரசாயன கலப்பு இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாய வழிகாட்டுதலின்படி விநாயகர் சிலைகளை தயாரிக்கவும் உத்தரவிட்டு மதுரையைச் சேர்ந்த அரசுபாண்டி என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்