செக் மோசடி வழக்கு; கடலூர் ஆசிரியைக்கு இரண்டு ஆண்டு சிறை!

கடலூர்: கடலூர் பள்ளி ஆசிரியைக்கு செக் மோசடி வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி வினோதினி. அதே பகுதியில் உள்ள சீமான் தோட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் வயலட் பாப்பா. தனது சொந்த பணிக்காக வயலட் பாப்பா முதுநகரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி வினோதினியிடம் ரூபாய் 14 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

கடன் பெற்ற தொகை அதற்கான வட்டி என ரூபாய் 15 லட்சத்திற்கு வைலட் பாப்பா காசோலையாக(செக் ) கடன் தொகையை திருப்பிக் கொடுப்பதாக தெரிவித்து வினோதினி இடம் வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து வினோதினி கடனுக்காக வழங்கப்பட்ட காசோலையை வங்கியில் செலுத்திய நிலையில் ஆசிரியை வயலட் பாப்பாவின் கணக்கில் போதிய பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு காசோலை திரும்பியது. இதைத் தொடர்ந்து வினோதினி கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கர் மூலம் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் காசோலை மோசடி தொடர்பாக வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று இறுதிக்கட்ட விசாரணை முடித்து தீர்ப்பளித்தார். இதில் ஆசிரியை வயலட் பாப்பாவிற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15 லட்சம் பணத்தை வினோதரிக்கு அளிக்க உத்தரவிட்டார். பணம் திரும்ப கொடுக்கப்படாத நிலையில் மேலும் மூன்று மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளித்தார்.

 

Related posts

இந்தியா – வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் பட்டம் வென்றார்

தேனியில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழப்பு