அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் கூத்தாண்டவர் கோயில் ரூ.18 லட்சத்தில் புனரமைப்பு

தமிழக சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சிதம்பரம் தொகுதி பாண்டியன்(அதிமுக) கேட்ட கேள்விகளுக்கு அறலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அளித்த பதில்: சிதம்பரம் தொகுதி பரங்கிப் பேட்டை ஊராட்சி ஒன்றியம், கொத்தட்டை ஊராட்சியில் உள்ள கூத்தாண்டவர் கோயில் புனரமைப்பு பணிகள் ரூ.18.2 லட்சம் செலவில் நடக்கிறது. இது வரை 45 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மே, ஜூன் மாதத்துக்குள் மீதம் உள்ள பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்தப்படும். மன்னர் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட குடமுழுக்கு போல 1378 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோயில்களுக்கு 2022-2023, 2023-2024ம் நிதியாண்டுகளில் ரூ.200 ேகாடி புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதனுடன் அன்பளிப்புகள், கோயில் நிதி என ரூ.106 கோடி என மொத்தமாக ரூ.306 கோடியில் இந்த பணிகள் நடக்க உள்ளன. இதுவரையில் 197 கோயில்களுக்கு புனரமைப்பு பணிகள் நடந்து, 26 கோயில்களுக்கு குடமுழுக்கு முடிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது