ரூ.5000 கோடி சூதாட்ட செயலி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ராய்பூர்: மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தது. சட்டீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், மற்றும் அவரது கூட்டாளி ரவி உப்பல் ஆகியோர் மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சவுரப் சந்திரகர், ரவி உப்பல், விகாஸ் சபாரியா, சந்திரபூஷன் வர்மா, சதீஷ் சந்திரகர் உள்ளிட்ட 14 பேர் அடங்கிய 197 பக்க முதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!