சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்ய கூடிய பணியில் முன்னனி நாடுகள் பங்கேற்றுவரகூடிய நிலையில், இந்தியா அனுப்ப கூடிய இந்த சந்திராயன்-3 செயற்கைக்கோள் என்பது முக்கியதுவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கபடுகிறது. இந்திய விண்வெளி ஆய்வில், ஒரு முக்கிய மைல்கல்-ஆக இருக்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதற்க்கு சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 ஏற்கனவே விண்ணில் செலுத்தபட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டிலும், 2019-ம் ஆண்டிலும் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தபட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு செலுத்தபட்ட சந்திரயான் -2 அதன் ரோவர் நிலவில் இறங்கும் போது ஏற்பட்ட சேதத்தின் காரணமாக சிக்னல் கிடைக்க பெறாமல் போனது.

இந்த முறை செலுத்தபடகூடிய சந்திரயான்-3செயற்கைக்கோள் என்பது மிக முக்கியதுவம் வாய்ந்ததாக இருக்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இதற்கான பணிகள் என்பது எற்கனவே தொடங்கபட்டுள்ளது. எல்விஎம்-3 ராக்கெட்டுடன் இந்த செயற்கைக்கோள்களை பொறுத்தும் பணி முடிவுற்றுள்ளது.

ஜூலை மாதம் 13-ம் தேதி முதல் 16-ம் தேதிக்கு இடையிலான நாட்களில் அனுப்பபடும் என அறிவிக்கபட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு