பதற்றம் அதிகரிப்பு!: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திராவின் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்..!!

ஆந்திரா: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திராவின் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பதி பேருந்து நிறுத்தம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினர், முதலமைச்சர் ஜெகன் மோகனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து விரைந்து நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர், போராட்டக்காரர்களை கைது செய்து இழுத்து சென்றனர். சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு; வாகனங்கள் இயங்கவில்லை.

இதேபோல் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் பேருந்துகளின் டயர்களை கொளுத்தி தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, வாகன போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு காரணமாக தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்கவில்லை. அசம்பாவிதங்களை தவிர்க்க மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெங்களூரு தனியார் பள்ளி பாட புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம்: பெற்றோர் கடும் எதிர்ப்பு

விமான கழிவறையில் சிகரெட் புகைத்த பயணி: அலாரம் ஒலித்ததால் சிக்கினார்

அசாமில் ரூ19 கோடி ஹெராயின் பறிமுதல்