இது எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு: விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜ வேட்பாளர் வி.எஸ்.நந்தினி பேட்டி

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக வி.எஸ்.நந்தினியை கட்சி தலைமை அறிவித்துள்ளது. இவர் பிபிஏ பட்டதாரி ஆவார். இவரது கணவர் சுரேஷ்குமார். இவருக்கு நிரஞ்சன் வயது (13) மகன் உள்ளார். இவர் ஏற்கனவே கட்சி மாவட்ட செயலாளர் பொறுப்பு, உட்பட பல்வேறு பொறுப்புகள் வசித்தவர். தற்பொழுது தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வகித்து வருகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு மேல்புறத்தில் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர் சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவிக்கையில்; தற்பொழுது தனக்கு போட்டியிட வாய்ப்பு அளித்த கட்சி தலைமைக்கு நன்றி. இது எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு. நான் மக்களில் ஒருவராக இருந்து அவர்களுடைய பிரச்சினையை கேட்டு உரிய தீர்வு காண்பேன். பிரதமர் மோடி அரசு பெண்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகிறது. 2013ம் ஆண்டு முதல் நான் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறேன்.

மக்கள் பிரச்சனையை மக்களுடன் இருந்து பணியாற்றுவது என்னுடைய நோக்கம். ஏற்கனவே எம்எல்ஏ விஜயதரணி திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததால் அவருக்கு தொகுதியில் திட்டங்களை கொண்டுவர முடியவில்லை. அவர் ஏற்கனவே என்ன வாக்குகளை கொடுத்தார் என்பது அறிந்து அந்த திட்டங்களை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன். தேர்தல் வீயூகத்தைப் பொறுத்தவரையில் நாம்தான் வியூகத்தை வகுக்க வேண்டும். மக்களுடன் இணைந்து இருக்கும் பொழுது அவர்களுடைய பிரச்சனையை அறிந்து அதற்கு தீர்வாக நம்மால் என்ன செய்ய முடியும் தொகுதியில் எனக்கும் எந்த கட்சிக்கு போட்டி என்பது தற்பொழுது கூற முடியாது. வேட்பாளர்களை பல கட்சிகள் அறிவிக்கவில்லை. வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு தான் இதுகுறித்து கூற முடியும். மாவட்டத்தில் முக்கிய பிரச்சனையான கனிமவள கடத்தல், நெய்யாறு இடது கரை கால்வாய் பிரச்சனை, மீனவர்களுக்கான ஹெலிகாப்டர் தங்குதளம் போன்றவற்றை அமைக்க முயற்சி மேற்கொள்வேன் என அவர் தெரிவித்தார்.

Related posts

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி