தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். கனமழை காரணமாக தூத்துக்குடி, திருச்செந்தூரில் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் எக்காரணத்தை முன்னிட்டும் வகுப்புகளோ, சிறப்பு வகுப்புகளோ எதுவும் நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளி முதல்வர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கிண்டி ரேஸ்கோர்ஸ் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

காஷ்மீர் இந்து வாக்காளர்களை பா.ஜ.க மிரட்டுவதாக புகார்; தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என பருக் அப்துல்லா கேள்வி

செய்யாறு அருகே சிறுமி உயிரிழந்ததற்கு குளிர்பானம் அருந்தியது காரணமல்ல என்று அறிக்கையில் தகவல்