5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு


சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 5 நாள்களுக்கு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அனேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட மிக அதிகமாகவும் வெப்ப நிலை இருந்தது. கடலோரப் பகுதியில் இயல்பை ஒட்டியே இருந்தது. இருப்பினும், ஈரோடு, வேலூர் பகுதியில் 104 டிகிரி வெயில் நிலவியது. இதுதவிர 10 மாவட்டங்களில் 100 டிகிரி மற்றும் அதைத்தாண்டிய வெயில் பதிவானது.

வெப்பநிலையை பொருத்தவரையில் 14ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒருசில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதே நிலை 14ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 15 மற்றும் 16ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி