தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


சென்னை: தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் அந்த மாதத்தில் மழையின் அளவு இயல்பை காட்டிலும் குறைவாக இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவியது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு