3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது வெயில்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தூத்துக்குடி, மதுரையில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. 7 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது. இதையடுத்து, 3 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கரூர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல், நாகப்பட்டினம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி, மதுரையில் அதிகபட்சமாக 104 டிகிரி (பாரன்ஹீட்) வெயில் கொளுத்தியது. திருச்சி, வேலூர், பரங்கிப்பேட்டை, ஈரோடு, கடலூர், கரூர் பகுதிகளில் 102 டிகிரி, சென்னை, நாகப்பட்டினம், புதுச்சேரி, தஞ்சாவூர், நாமக்கல் பகுதிகளில் 100 டிகிரி வெயில் நிலவியது. இதற்கிடையே, வெப்ப சலனம் காரணமாகவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். இவை தவிர திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்