கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்..!!

கான்பூர்: கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார். 32 வயதான பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிர் பிரிந்தது. 2011 உலகக்கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என அறிவித்து பரபரப்பை கிளப்பியவர் பூனம் பாண்டே. கான்பூரில் 1991-ல் பிறந்த பூனம் பாண்டே மாடலிங் துறையில் நுழைந்த பிறகு திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் பூனம் பாண்டே. சர்ச்சைகளுக்கு பேர்போன பூனம் பாண்டே, 2013-ல் நாஷா என்ற படம் மூலம் அறிமுகமானார். இவரது மரணச் செய்தி மாடலிங் மற்றும் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருப்பினும், ஒரு சில சமூக ஊடக பயனர்கள் இது அவரது விளம்பர ஸ்டண்டாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். பூனம் பாண்டே, லாக் அப், ஃபியர் ஃபேக்டர்: கத்ரோன் கே கிலாடி 4 மற்றும் பிக் பாஸ் சீசன் 7 உள்ளிட்ட பிரபலமான ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளிலும் பிரபலமானவர். பூனம் பாண்டே ஒரு பன்முக ஆளுமை, பொழுதுபோக்கு துறையில் தனது பணிக்காக மட்டுமல்லாமல், சமூக ஊடக தளங்களில் அவரது துடிப்பான இருப்புக்காகவும் அறியப்படுகிறார். ஒரு மாடலாகவும், நடிகையாகவும் அவரது பயணம் பார்வையாளர்களை கவர்ந்தது. திரையில் அவரது திறமை மற்றும் கவர்ச்சியை வெளிப்படுத்தியது. அவரது தொண்டு முயற்சிகள் பலரது இதயங்களில் அழியாத முத்திரையை பதித்துள்ளது என்றே கூறலாம்.

 

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்