‘சான்றிதழ் வேணும்னா என் கூட சந்தோஷமா இரு…’ பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விஏஓ சஸ்பெண்ட்: விழுப்புரம் கோட்டாட்சியர் உத்தரவு

விழுப்புரம்: விதவை சான்றிதழ் கேட்டு இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கிராம நிர்வாக அலுவலரை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் நேற்று உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாபாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் கணவர் கடந்த 2014ம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 11 வயது மகனுடன் அவர் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித்தொகை வழங்ககோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாசிடம் அவர் விண்ணப்பித்துள்ளார். இந்த சான்றிதழ் வழங்க அரோக்கியதாஸ் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ரூ.3000 கொடுத்து இறப்பு சான்றிதழை அந்த இளம்பெண் பெற்றுள்ளார். பின்னர், அந்த பெண்ணின் எண்ணை அவர் தொடர்பு கொண்டு தனியாக வர வேண்டுமென்று அழைத்து உள்ளார்.

அப்போது விதவை சான்றிதழ் கொடுக்க வேண்டுமென்றால் என்னிடம் 5 நிமிடம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இளம்பெண்ணுக்கு, ஆரோக்கியதாஸ் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரிடம் செல்போனில் பேசிய ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண், எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆரோக்கியதாசை சஸ்பெண்ட் செய்து கோட்டாட்சியர் காஜாசாகுல் அமீது நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்