உடாய் அமைப்பின் சி.இ.ஓ.வாக அமித் அகர்வால் நியமனம்: தேசிய தேர்வு முகமை இயக்குனரானார் சுபோத் குமார்

புதுடெல்லி: உடாய் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமித் அகர்வாலும், தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குனராக சுபோத் குமார் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சட்டீஸ்கர் மாநில அதிகாரிகள் பிரிவை சேர்ந்தவர்களாவர். தற்போது, 1993ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த அகர்வால் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றி வருகிறார். அதே போல், 1997ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த சிங் தற்போது நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது வினியோகம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு மற்றும் பொது வினியோகம் துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றுகிறார். சிங்கின் பதவிக்கு தற்போது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் கூடுதல் செயலாராக பணியாற்றும் ரிச்சா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய தகவல் ஆணையத்தின் செயலாளராக ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் கூடுதல் செயலராக பணியாற்றும் ராஷ்மி சவுதாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு