தங்கக் கடத்தல்காரர்களுக்கு உடந்தை மத்திய தொழிற் பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கடந்த சில தினங்களுக்கு முன் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கார் நின்று கொண்டிருப்பதை போலீசார் கவனித்தனர். இதையடுத்து போலீசார் அந்த காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

2 பேரையும் கைது செய்து விசாரித்ததில் அவர்களுக்கு விமான நிலையத்தில் சரக்குப் பிரிவில் பணிபுரியும் ஷரப் அலியுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஷரப் அலியின் செல்போனை பரிசோதித்தபோது விமான நிலைய தொழிற் பாதுகாப்புப் படை உதவி கமாண்டன்டான நவீன் குமார் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததால்உதவி கமாண்டன்ட் நவீன் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!