கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சிங்கம், நெருப்புக் கோழி, மயில், புறாக்களுக்கு உணவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஜெ.உமா மகேஸ்வரன் ஏற்பாட்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு, ஒரு நாள் உணவும் மேலும் மயில், புறா, நெருப்புக் கோழிகள் ஆகியவற்றை தத்தெடுத்து ஆண்டு முழுவதும் உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

இந்த திட்டத்தை முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.சுரேஷ்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஆர்.செந்தாமரை, ஜி.சி.சி.கருணாநிதி, அக்னி ராஜேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை