கடையின் பூட்டை உடைத்து செல்போன் கொள்ளை


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த காளிதாஸ்(36). கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை திறப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த காளிதாஸ், இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ₹1 லட்சம் மதிப்புள்ள 6 செல்போன்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

அதேபோல், கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள டீக்கடையிலும் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. அதன்படி, 2 கடையை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து, சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related posts

தமிழ்நாடு  அரசுப்  பணியாளர்  தேர்வாணையம்  மூலம் 780 தணிக்கையாளர்  பணியிடங்களுக்கு தெரிவு  செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன  ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசால் வெண்கலம் வென்றார்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு