புழல் மத்திய சிறையில் செல்போன், சார்ஜர் பறிமுதல்: போலீசார் விசாரணை

புழல்: புழல் மத்திய சிறையில், செல்போன், சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை புழல் மத்திய சிறையில் நாளுக்கு நாள் கைதிகளிடையே செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, புழல் சிறையில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி, செல்போன் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள அறைகளில் சிறை காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு கழிவறைக்குள் தென்காசியை சேர்ந்த கைதி குமார்(38) என்பவர் மறைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர், பேட்டரி மற்றும் சிம்கார்டுகளை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related posts

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு