செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கு: போலீசிடம் செல்போனை ஒப்படைத்தார் டிடிஎப் வாசன்

மதுரை: செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசன் தனது செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் வழியில் செல்போன் பேசியபடி காரை ஓட்டியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதற்காக மன்னிப்பு கேட்டதை அடுத்து நீதிமன்றம் டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கியிருந்தது. நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியிருந்த நிலையில் டிடிஎப் வாசன், தனது செல்போனை தர போலீஸ் நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீசை அடுத்து மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் இன்று தனது செல்போனை டிடிஎப் வாசன் ஒப்படைத்தார்.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்