சிபிஐ விசாரணையை ரத்து செய்யக்கோரிய டி.கே.சிவக்குமார் வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே சிவக்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதையடுத்து மேற்கண்ட வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் 2023ம் ஆண்டு கர்நாடகாவில் டி.கே சிவகுமார் துணை முதல்வராக பொறுப்பேற்றதும், முந்தைய அரசு வழங்கி இருந்த (பாஜக) டி.கே.சிவகுமார் மீதான சிபிஐ விசாரணை கோரிக்கையை காங்கிரஸ் அரசு திரும்ப பெற்றது. இதையடுத்து மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிராக கர்நாடக மாநில பாஜக தலைவர் மற்றும் சிபிஐ அமைப்பு ஆகிய இருதரப்பும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து அதில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீதான சிபிஐ வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் பேலா.எம் திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த விசாரணையில் தலையிட முடியாது எனக்கூறி டி.கே சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி