கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை மும்முரம்!

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை மும்முரம் படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மூன்றாவது கட்ட விசாரணைக்கு ஆஜரானார். நேற்று 13 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் இன்று மீண்டும் சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொலை நிகழ்ந்ததாக கூறப்படும் கருத்தரங்க அறையை அவசரமாக புதுப்பிக்க உத்தரவிட்டது ஏன்? என விசாரணை. பெண் மருத்துவர் கொலையில் சதி அல்லது முன் திட்டமிடல் உள்ளதா? என்பது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

 

Related posts

மொபட்-பைக் மோதல்; 3 பேர் பரிதாப பலி: பைக்-லாரி மோதி தம்பதி சாவு

தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை:துக்கம் தாளாமல் காதலனும் சாவு

பள்ளியில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி அதிமுக மாஜி எம்.பி.யிடம் ரூ.50 லட்சம் மோசடி: தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு