சிபிஐ கைது சட்டவிரோதம் கெஜ்ரிவாலின் ஜாமீன் வழக்கு ஒத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 5ம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “ அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற்ற சூழலில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு பிறகு கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்துள்ளது ” என்று வாதிட்டார்.

தொடர்ந்து சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, “இந்த விவகாரத்தில் முதலில் கெஜ்ரிவால் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு செல்லாமல் நேரடியாக உயர் நீதிமன்றத்துக்கு ஏன் சென்றார் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. எனவே அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க கூடாது” என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கை பொறுத்தவரை மூன்று பாரா உத்தரவை எழுதவா உயர் நீதிமன்றம் ஏழு நாட்கள் அவகாசம் எடுத்து கொண்டது வழக்கில் முக்கிய கேள்வியாக உள்ளது. குறைந்தபட்சம் நோட்டீஸ் பிறப்பிக்காமல் அன்றைய தினமே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். அதனை செய்ய உயர் நீதிமன்றம் தவறி விட்டது ” என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

 

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்