பா.ஜ.கவின் சார்பு அணிகளாக செயல்படும் சி.பி.ஐ, அமலாக்கத்துறை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை: பா.ஜ.கவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அமலாக்கத்துறையால் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், பா.ஜ.கவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது. ஆனால், முடிவில் யாரையும் பா.ஜனதா அரசு கைது செய்யவில்லை. பா.ஜனதா எத்தனை சோதனைகள் நடத்தினாலும் தி.மு.க.வின் கிளை செயலாளர் கூட பயப்படமாட்டான். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மறு உருவமாக செயல்படுவேன் எனவும் கூறினார்.

Related posts

லித்தியம் அயன் பேட்டரி

இஸ்லாமியர்களின் கருத்தை கேட்கவில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து தவறு: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; அம்பத்தூர் 7வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள்