கொடநாடு கொலை வழக்கில் சயானிடம் சிபிசிஐடி விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை கவழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ், ஜிஜின், திபு, ஜம்சீர் உட்பட 11 பேரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்தனர். கனகராஜ் விபத்தில் இறந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதுவரை சசிகலா உட்பட 300க்கும் மேற்பட்டவர்களின் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் நேற்று காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்காக நேற்று மதியம் சயான் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சயான் சில முக்கிய தகவல்களை கூறியதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதர முக்கிய குற்றவாளிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்