காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆக.21ல் விசாரணை..!!

டெல்லி: காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. காவிரி நீர் தொடர்பாக தாக்கல் செய்த இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது. தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்தார்.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்யாததாலும், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததாலும் 5 லட்சம் ஏக்கரில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை வரை தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டிய 28.8 டிஎம்சி நீரை திறந்து விட கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் மாதத்துக்குன்டான 45 டிஎம்சி நீரை இம்மாத இறுதிக்குள் திறந்து விட வேண்டும் என்றும் செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய 36.76 டிஎம்சி நீரை உரிய நேரத்தில் திறந்து விடவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தண்ணீர் இன்றி பயிர் கருகுவதால் கர்நாடக அரசு காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கனஅடி நீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு இடையீட்டு மனுத் தாக்கல் செய்தது. இடையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. பட்டியலில் இணைக்கப்படாமல் முறையீட்டை எவ்வாறு ஏற்பது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். முறையீட்டு பட்டியலில் இணைக்க பதிவாளரிடம் கோரிக்கை வைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Related posts

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்