காவிரி நதிநீர் பங்கீடு விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்துக்கே அதிகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு


பெங்களூரு: பெங்களூருவில் இயங்கிவரும் ‘‘விழிப்புணர்வு கர்நாடகா, விழிப்புணர்வு இந்தியா‘‘ என்ற அமைப்பின் தலைவர் கே.என்.மஞ்சுநாத், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காவிரி பிரச்னை தொடர்பான மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பிரசன்ன பி.வர்லெ மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்ஷித் ஆகியோர் அமர்வு, பிற மாநிலங்கள் இடையிலான நதிநீர் பங்கீட்டு சட்டம்-1956ன் படி நதிநீர் பங்கீடு தொடர்பாக வழக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு கிடையாது. அது உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்று கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Related posts

கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு 116 பேருக்கு அழைப்பு

ஒடுகத்தூர் அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மண் தரை பாலம் சீரமைப்பு