காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழில்துறை வழித்தடத்திற்கு ஒன்றிய அரசின் நிதியுதவி எவ்வளவு? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழில்துறை வழித்தடத்திற்கு ஒன்றிய அரசு முன்மொழிந்த நிதியுதவி எவ்வளவு? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்திடம் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள் வருமாறு :

* காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழில்துறை வழித்தடத்திற்கு ஒன்றிய அரசு முன்மொழிந்த நிதியுதவி எவ்வளவு எனவும் தேனி, மணப்பாறை மற்றும் திண்டிவனத்தில் உணவுப் பூங்காக்களை மேம்படுத்த கூடுதல் நிதி அல்லது மானியங்கள் ஏதேனும் உள்ளதா, அதன் விவரங்கள் என்ன?

* வேளாண்-தொழில்துறை திட்டங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஒன்றிய அரசு உதவும் விதம் மற்றும் இந்தத் திட்டங்களுக்கான சரியான நேரத்தில் ஆதரவை உறுதி செய்வதில் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களின் பங்கு என்ன?

* உணவு பதப்படுத்தும் அலகுகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ள முன்முயற்சிகள் என்ன எனவும் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் வகையில் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

* தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளை அணுக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவிலான உற்பத்தியாளர்களுக்கு உதவ ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

* உணவு பதப்படுத்துதல் மற்றும் அது சார்ந்த துறைகளில் சிறப்புப் பயிற்சி படிப்புகளை வழங்குவதற்கு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அமைச்சகத்தால் ஏதேனும் திட்டங்கள் அல்லது கொள்கைகள் செயல்படுத்தப்படுகிறதா மற்றும் அது தொடர்பான விவரங்கள் என்ன என கேள்வி எழுப்பினார்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்