காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைபாட்டில் சந்தேகம்: மேட்டூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நிரம்பியது. இதனைதொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று நிலவரப்படி வினாடிக்கு 1.10லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலதுகரை, இடதுகரை, சுரங்கம் மின்நிலையம் பகுதிகளை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு சந்தேகத்திற்குரியதாக உள்ளது. மேட்டூர் அணையில் உபரிநீர் திட்டம் மேச்சேரி ஏரிக்கும் நீடிக்கப்படும். நிதி ஆதாரத்தை பொருத்து உபரிநீர் முழுமையாக மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். முன்னதாக அவர், மேட்டூர் காவிரியில் மலர் தூவி காவிரியை வணங்கினார்.

Related posts

தேனி மாவட்டம் அருகே விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 3 சிறுவர்கள் பலி

கிண்டி ரேஸ்கோர்ஸ் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

காஷ்மீர் இந்து வாக்காளர்களை பா.ஜ.க மிரட்டுவதாக புகார்; தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என பருக் அப்துல்லா கேள்வி