காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குழம்பு

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு…

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
சோம்பு – 3/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
மல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 4
மிளகு – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 8 பல்
கறிவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
புளி – 1/2 இன்ச்
தக்காளி – 3 (நறுக்கியது)
உப்பு – 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப்

பிற பொருட்கள்:

காலிஃப்ளவர் – 500 கிராம்
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு – 2 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
தண்ணீர் – 3 கப்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை

முதலில ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் சோம்பு, சீரகம், மல்லி, வரமிளகாய், மிளகு, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு, புளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு நிறம் மாறும் வரை வாக்க வேண்டும்.பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, துருவிய தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து துண்டுகளாக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும். பின் துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவரை சேர்த்து, அத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து காலிஃப்ளவரை வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குழம்பு தயார்.

Related posts

தர்பூசணி தோல் துவையல்

உளுத்தம் பருப்பு துவையல்

பீட்ரூட் குழம்பு