கட்டிட மேஸ்திரியிடம் வழிப்பறி சிசிடிவி காட்சி மூலம் 6 வாலிபர்கள் சிக்கினர்: வாலாஜாபாத் அருகே பரபரப்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே கட்டிட மேஸ்திரியிடம் பணம், செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 6 வாலிபர்களை, சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு டாஸ்மார்க் கடை பகுதிக்கு சென்று, சக நண்பர்களுக்கு மது வாங்கிக்கொண்டு சுங்குவார்சத்திரம் திரும்பியுள்ளார். இதனை, அங்கிருந்து நேட்டமிட்டு சபரிநாதனை பின் தொடர்ந்து சென்ற 6 பேர் கொண்ட மர்ம நபர்கள், சபரிநாதனிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பணம், செல்போன் ஆகியற்றை பறித்துக்கொண்டு துரத்தி சென்றனர்.

அதனைத்தொடர்ந்து, அவ்வழியாக வந்த 2 வடமாநில இளைஞர்களை பிடித்து, அவர்களிடமிருந்த 2 மதுபாட்டில்களை பிடுங்கிக்கொண்டு, அவர்களையும் அங்கிருந்து துரத்தி விட்டுள்ளனர். இதுகுறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரை பார்த்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால், இன்ஸ்பெக்டர் பிரபாகர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வல்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த தீபன் (25), திலிப்குமார் (26), விஷ்வா (22), அகரம் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்தன் (25), கன்னியாகுமரியை சேர்ந்த எக்டே (23), திருவாரூரை சேர்ந்த சுபாஷ் (25) ஆகிய 6 பேரை கைது செய்து நடத்திய விசாரணையில், வாலாஜாபாத் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைனயடுத்து, கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 6 பேரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தகவல் கிடைத்த 3 மணி நேரத்தில், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் வழிப்பறி குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு

நீண்டகால யோசனை, பல பரிசீலனைக்கு பிறகு மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்