நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் வெள்ளப்பெருக்கு: சுருளி அருவியில் குளிக்க தடை

கம்பம்: கம்பம் அருகே, நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிக தலமாகவும் திகழ்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியில் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், சுருளி அருவிக்கு தண்ணீர் வரும் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி, தூவானம் அணை, அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கேரளா மற்றும் கம்பம் பள்ளத்தாக்கில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் இன்று காலை தடை விதித்தனர். இன்று அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு