சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது ஒன்றிய அரசின் அதிகார எல்லைக்குட்பட்டது, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது ஒன்றிய அரசின் அதிகார எல்லைக்குட்பட்டது, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பை அவ்வப்போது நடத்த வேண்டும் என இந்திரா சகானி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வாதம் முன்வைக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், மனுவை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு