சாதி பெயரை சேர்த்தது தவறில்லை: நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பேட்டி

விருதுநகர்: விருதுநகரில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள், சாதி பெயருடன் சேலம் ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ள விவகாரத்தில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என வணிகவரித்துறை துணை ஆணையர் பாலமுருகன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கவர்னர் இல.கணேசன், ‘‘தமிழ்நாட்டில் மட்டும்தான் குடும்பப் பெயரையோ, சாதி பெயரையோ சேர்த்து கூறுவது எழுதுவது புழக்கத்தில் இல்லை. நிறுத்தி விட்டனர். ஆனால் வட மாநிலங்களில் ஜாதி பெயர் மற்றும் குடும்பப் பெயரை போடுவதை வழக்கமாக வைத்திருக்கி றார்கள். அங்கு எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ அவர்கள் பின்னால் இப்பெயர்கள் சகஜமாக வரும். நீங்கள் கூறும் அதிகாரி குறித்து எனக்கு தெரியவில்லை. அவரே சாதி பெயரை சேர்த்திருக்கிறாரா? சேர்த்திருந்தாலும் தவறில்லை. இது பற்றி எனக்கு தெரியவில்லை’’ என்றார்.

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து